Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௨

وَقَالَ الشَّيْطٰنُ لَمَّا قُضِيَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْۗ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّآ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِيْ ۚفَلَا تَلُوْمُوْنِيْ وَلُوْمُوْٓا اَنْفُسَكُمْۗ مَآ اَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ اَنْتُمْ بِمُصْرِخِيَّۗ اِنِّيْ كَفَرْتُ بِمَآ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ ۗاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ   ( ابراهيم: ٢٢ )

And will say
وَقَالَ
கூறுவான்
the Shaitaan
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
when has been decided
لَمَّا قُضِىَ
முடிக்கப்பட்டபோது
the matter
ٱلْأَمْرُ
காரியம்
"Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
promised you
وَعَدَكُمْ
வாக்களித்தான் உங்களுக்கு
a promise (of) truth
وَعْدَ ٱلْحَقِّ
வாக்கை/ உண்மையானது
And I promised you
وَوَعَدتُّكُمْ
நான் வாக்களித்தேன்/உங்களுக்கு
but I betrayed you
فَأَخْلَفْتُكُمْۖ
நான் வஞ்சித்தேன்/உங்களை
But not I had
وَمَا كَانَ
இல்லை
I had
لِىَ
எனக்கு
over you any
عَلَيْكُم مِّن
அறவே/உங்கள் மீது
authority
سُلْطَٰنٍ
அதிகாரம்
except that I invited you
إِلَّآ أَن دَعَوْتُكُمْ
எனினும்/உங்களை அழைத்தேன்
and you responded
فَٱسْتَجَبْتُمْ
பதில் தந்தீர்கள்
to me
لِىۖ
எனக்கு
So (do) not blame me
فَلَا تَلُومُونِى
ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்
but blame
وَلُومُوٓا۟
நிந்தியுங்கள்
yourselves
أَنفُسَكُمۖ
உங்களையே
Not (can) I
مَّآ أَنَا۠
நான் இல்லை
(be) your helper
بِمُصْرِخِكُمْ
உங்களுக்கு உதவுபவனாக
and not you (can)
وَمَآ أَنتُم
இல்லை/நீங்கள்
(be) my helper
بِمُصْرِخِىَّۖ
உதவுபவர்களாக/எனக்கு
Indeed, I
إِنِّى
நிச்சயமாக நான்
deny
كَفَرْتُ
நிராகரித்தேன்
[of what] your association of me (with Allah)
بِمَآ أَشْرَكْتُمُونِ
நீங்கள் இணை ஆக்கியதை/ என்னை
before before
مِن قَبْلُۗ
முன்னரே
Indeed
إِنَّ
நிச்சயமாக
the wrongdoers
ٱلظَّٰلِمِينَ
அணியாயக்காரர்கள்
for them
لَهُمْ
அவர்களுக்கு
(is) a punishment
عَذَابٌ
வேதனை
painful"
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Wa qaalash Shaitaanu lammaa qudiyal amru innal laaha wa'adakum wa'dal haqqi wa wa'attukum faakhlaftukum wa maa kaana liya 'alaikum min sultaanin illaaa an da'awtukum fastajabtum lee falaa taloomoonee wa loomooo anfusakum maaa ana bimusrikhikum wa maaa antum bimusrikhiyya innee kafartu bimaaa ashraktumooni min qabl; innaz zaalimeena lahum azaabun aleem (ʾIbrāhīm 14:22)

Abdul Hameed Baqavi:

(இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு (ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; "நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்" என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு யாதொரு உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணை ஆக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்.

English Sahih:

And Satan will say when the matter has been concluded, "Indeed, Allah had promised you the promise of truth. And I promised you, but I betrayed you. But I had no authority over you except that I invited you, and you responded to me. So do not blame me; but blame yourselves. I cannot be called to your aid, nor can you be called to my aid. Indeed, I deny your association of me [with Allah] before. Indeed, for the wrongdoers is a painful punishment." ([14] Ibrahim : 22)

1 Jan Trust Foundation

(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை; ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்து கொள்ளுங்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை; நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று கூறுவான்.