Skip to main content

ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௫

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَآ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ەۙ وَذَكِّرْهُمْ بِاَيّٰىمِ اللّٰهِ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ  ( ابراهيم: ٥ )

And verily We sent
وَلَقَدْ أَرْسَلْنَا
திட்டமாக அனுப்பினோம்
Musa with Our Signs
مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ
மூஸாவை/நம் அத்தாட்சிகளைக் கொண்டு
that "Bring out
أَنْ أَخْرِجْ
வெளியேற்று
your people
قَوْمَكَ
உம் சமுதாயத்தை
from the darkness[es]
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
to the light
إِلَى ٱلنُّورِ
ஒளியின் பக்கம்
And remind them
وَذَكِّرْهُم
இன்னும் ஞாபகமூட்டு அவர்களுக்கு
of the days
بِأَيَّىٰمِ
அருட்கொடைகளை
(of) Allah"
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
Indeed in that
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
surely (are) the signs
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
for everyone
لِّكُلِّ
எல்லோருக்கும்
patient
صَبَّارٍ
மிக பொறுமையாளர்
and thankful
شَكُورٍ
மிக நன்றியறிபவர்

Wa laqad arsalnaa Moosaa bi Aayaatinaa an akhrij qawmaka minaz zulumaati ilan noori wa zak kirhum bi ayyaamil laah; inna fee zaalika la aayaatil likulli sabbaarin shakoor (ʾIbrāhīm 14:5)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சி களுடன் அனுப்பி வைத்து "நீங்கள் உங்கள் மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்" என்று அவருக்குக் கட்டளையிட்டோம். (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

English Sahih:

And We certainly sent Moses with Our signs, [saying], "Bring out your people from darknesses into the light and remind them of the days of Allah." Indeed in that are signs for everyone patient and grateful. ([14] Ibrahim : 5)

1 Jan Trust Foundation

நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.