Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௦௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَقُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ  ( البقرة: ١٠٤ )

O you who believe[d]!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
"(Do) not say
لَا تَقُولُوا۟
கூறாதீர்கள்
"Raina"
رَٰعِنَا
ராஇனா
and say
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
"Unzurna"
ٱنظُرْنَا
உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை)
and listen
وَٱسْمَعُوا۟ۗ
இன்னும் செவிமடுங்கள்
And for the disbelievers
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
(is) a punishment
عَذَابٌ
வேதனை
painful
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது

Yaaa ayyuhal lazeena aamanoo laa taqooloo raa'inaa wa qoolun zurnaa wasma'oo; wa lilkaafireena 'azaabun aleem (al-Baq̈arah 2:104)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராயினா" எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக "எங்களைப் பாருங்கள்!" என்ற பொருளைத் தரும்) "உன்ளுர்னா" எனக் கூறுங்கள். (மேலும் நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

English Sahih:

O you who have believed, say not [to Allah's Messenger], "Ra’ina" but say, "Unzurna" and listen. And for the disbelievers is a painful punishment. ([2] Al-Baqarah : 104)

1 Jan Trust Foundation

ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.