(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது சமுதாயமும் சமூது சமுதாயமும், இப்றாஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை) பொய்ப்பித்தனர். மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலம் கழித்த) பிறகு நான் அவர்களைப் பிடித்தேன். (-தண்டனையை இறக்கினேன்.) ஆகவே, எனது மறுப்பு (-எனது தண்டனை) எப்படி இருந்தது?