இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதனைக்கொண்டு (வரண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கும்) காற்றுகளை திருப்பிவிடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
English Sahih:
And [in] the alternation of night and day and [in] what Allah sends down from the sky of provision [i.e., rain] and gives life thereby to the earth after its lifelessness and [in His] directing of the winds are signs for a people who reason. ([45] Al-Jathiyah : 5)
1 Jan Trust Foundation
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும் காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.