அதற்கவர்கள் "மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலன்றி இருக்க வில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்" எனறு கூறுவார்கள்.
English Sahih:
They will say, "Yes, a warner had come to us, but we denied and said, 'Allah has not sent down anything. You are not but in great error.'" ([67] Al-Mulk : 9)
1 Jan Trust Foundation
அதற்கவர்கள் கூறுவார்கள்| “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை”என்று நாங்கள் கூறினோம்.”