Skip to main content

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௩௧

وَمَا جَعَلْنَآ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰۤىِٕكَةً ۖوَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْاۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِيْمَانًا وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًاۗ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۗ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَۗ وَمَا هِيَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ ࣖ  ( المدثر: ٣١ )

And not We have made
وَمَا جَعَلْنَآ
நாம் ஆக்கவில்லை
keepers (of) the Fire
أَصْحَٰبَ ٱلنَّارِ
நரகத்தின் காவலாளிகளை
except Angels
إِلَّا مَلَٰٓئِكَةًۙ
தவிர/வானவர்களாக
And not We have made
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கவில்லை
their number
عِدَّتَهُمْ
அவர்களின் எண்ணிக்கையை
except
إِلَّا
தவிர
(as) a trial
فِتْنَةً
ஒரு குழப்பமாகவே
for those who disbelieve
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
that may be certain
لِيَسْتَيْقِنَ
உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்)
those who were given the Scripture
ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
and may increase
وَيَزْدَادَ
அதிகரிப்பதற்காகவும்
those who believe
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
(in) faith
إِيمَٰنًاۙ
நம்பிக்கையால்
and not may doubt
وَلَا يَرْتَابَ
சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும்
those who were given the Scripture
ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப்பட்டவர்களும்
and the believers
وَٱلْمُؤْمِنُونَۙ
நம்பிக்கையாளர்களும்
and that may say
وَلِيَقُولَ
கூறுவதற்காகவும்
those
ٱلَّذِينَ
எவர்கள்
in their hearts
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
(is) a disease
مَّرَضٌ
நோய்
and the disbelievers
وَٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களும்
"What
مَاذَآ
என்ன
(does) intend
أَرَادَ
நாடுகின்றான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
by this
بِهَٰذَا
இதன் மூலம்
example?"
مَثَلًاۚ
உதாரணத்தை
Thus
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
does let go astray
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
whom He wills
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
and guides
وَيَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
whom He wills
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களை
And none knows
وَمَا يَعْلَمُ
அறிய மாட்டார்(கள்)
(the) hosts
جُنُودَ
இராணுவங்களை
(of) your Lord
رَبِّكَ
உமது இறைவனின்
except
إِلَّا
தவிர
Him
هُوَۚ
அவனை
And not it
وَمَا هِىَ
இல்லை/இது
(is) but
إِلَّا
தவிர
a reminder
ذِكْرَىٰ
ஒரு நினைவூட்டலே
to (the) human beings
لِلْبَشَرِ
மனிதர்களுக்கு

Wa maaja''alnaaa As haaban naari illaa malaaa 'ikatanw wa maa ja'alnaa 'iddatahum illaa fitnatal lillazeena kafaroo liyastayqinal lazeena ootul kitaaba wa yazdaadal lazeena aamanooo eemaananw wa laa yartaabal lazeena ootul kitaaba walmu'minoona wa liyaqoolal lazeena fee quloo bihim maradunw walkaafiroona maazaaa araadal laahu bihaazaa masalaa; kazaalika yudillul laahu many yashaaa'u wa yahdee many yashaaa'; wa maa ya'lamu junooda rabbika illaa hoo; wa maa hiya illaa zikraa lil bashar (al-Muddathir 74:31)

Abdul Hameed Baqavi:

நரகத்தின் காவலாளிகளாக மலக்குகளையேயன்றி (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு) இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதனை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். (நபியே!) உங்கள் இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களேயன்றி வேறில்லை.

English Sahih:

And We have not made the keepers of the Fire except angels. And We have not made their number except as a trial for those who disbelieve – that those who were given the Scripture will be convinced and those who have believed will increase in faith and those who were given the Scripture and the believers will not doubt and that those in whose hearts is disease [i.e., hypocrisy] and the disbelievers will say, "What does Allah intend by this as an example?" Thus does Allah send astray whom He wills and guide whom He wills. And none knows the soldiers of your Lord except Him. And it [i.e., mention of the Fire] is not but a reminder to humanity. ([74] Al-Muddaththir : 31)

1 Jan Trust Foundation

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்| “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.