(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.)
English Sahih:
But the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth." ([12] Yusuf : 45)
1 Jan Trust Foundation
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு கூர்ந்தான் “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்.”