அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார்.
English Sahih:
And when the bearer of good tidings arrived, he cast it over his face, and he returned [once again] seeing. He said, "Did I not tell you that I know from Allah that which you do not know?" ([12] Yusuf : 96)
1 Jan Trust Foundation
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். அவர் பார்வையுடையவராக திரும்பினார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.