Wa 'alal lazeena haadoo harramnaa ma qasasnaa 'alaika min qablu wa maa zalamanaahum wa laakin kaanoo anfusahum wa laakin kaanoo anfusahum yazlimoon (an-Naḥl 16:118)
(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவைகளை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதனைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவைகளைத் தடுத்துக் கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
English Sahih:
And to those who are Jews We have prohibited that which We related to you before. And We did not wrong them [thereby], but they were wronging themselves. ([16] An-Nahl : 118)
1 Jan Trust Foundation
இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்களாக இருப்பவர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு (தாங்களே) தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.