Skip to main content

ஸூரத்து லுக்மான் வசனம் ௨௦

اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ۗوَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ  ( لقمان: ٢٠ )

Do not you see
أَلَمْ تَرَوْا۟
நீங்கள் பார்க்கவில்லையா?
that
أَنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
has subjected
سَخَّرَ
வசப்படுத்தினான்
to you
لَكُم
உங்களுக்கு
whatever (is) in the heavens
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை(யும்)
and whatever (is) in the earth
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவற்றையும்
and amply bestowed
وَأَسْبَغَ
இன்னும் நிறைவாக்கினான்
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
His Bounties
نِعَمَهُۥ
தனது அருட்கொடைகளை
apparent
ظَٰهِرَةً
வெளிப்படையாக(வும்)
and hidden?
وَبَاطِنَةًۗ
மறைவாகவும்
But of the people
وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றனர்
(is he) who disputes
مَن يُجَٰدِلُ
தர்க்கம் செய்கின்றவரும்
about Allah
فِى ٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
without knowledge
بِغَيْرِ عِلْمٍ
கல்வி இன்றி(யும்)
and not guidance
وَلَا هُدًى
நேர்வழி இன்றியும்
and not a book
وَلَا كِتَٰبٍ
வேதமின்றியும்
enlightening
مُّنِيرٍ
பிரகாசமான

Alam taraw annal laaha sakhkhara lakum maa fis sa maawaati wa maa fil ardi wa asbaha 'alaikum ni'amahoo zaahiratanw wa baatinah; wa minan naasi many yujaadilu fil laahi bighayri 'ilminw wa laa hudanw wa laa Kitaabim muneer (Luq̈mān 31:20)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், அவன் தன் அருட்கொடைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் உங்கள் மீது சொரிந்திருக்கின்றான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? (இவ்வாறெல்லாமிருந்தும்) மனிதர்களில் பலர் யாதொரு கல்வியும், யாதொரு (தர்க்கரீதியான) ஆதாரமும், யாதொரு தெளிவான வேத நூலின் ஆதாரமுமின்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கின்றனர்.

English Sahih:

Do you not see that Allah has made subject to you whatever is in the heavens and whatever is in the earth and amply bestowed upon you His favors, [both] apparent and unapparent? But of the people is he who disputes about Allah without knowledge or guidance or an enlightening Book [from Him]. ([31] Luqman : 20)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.