நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.
English Sahih:
O Prophet, say to your wives, "If you should desire the worldly life and its adornment, then come, I will provide for you and give you a gracious release. ([33] Al-Ahzab : 28)
1 Jan Trust Foundation
நபியே! உம்முடைய மனைவிகளிடம்| “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.”