Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௦

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًاۗ اِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ۗوَالَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَمَكْرُ اُولٰۤىِٕكَ هُوَ يَبُوْرُ   ( فاطر: ١٠ )

Whoever
مَن
யார்
[is] desires
كَانَ
இருப்பாரோ
[is] desires
يُرِيدُ
நாடுகின்றவராக
the honor
ٱلْعِزَّةَ
கண்ணியத்தை
then for Allah
فَلِلَّهِ
அல்லாஹ்விற்குத்தான்
(is) the Honor
ٱلْعِزَّةُ
கண்ணியம்
all
جَمِيعًاۚ
அனைத்தும்
To Him
إِلَيْهِ
அவன் பக்கம் தான்
ascends
يَصْعَدُ
உயர்கின்றன
the words
ٱلْكَلِمُ
சொற்கள்
good
ٱلطَّيِّبُ
நல்ல
and the deed
وَٱلْعَمَلُ
இன்னும் செயல்
righteous
ٱلصَّٰلِحُ
நல்ல(து)
raises it
يَرْفَعُهُۥۚ
அதை உயர்த்துகிறது
But those who plot
وَٱلَّذِينَ يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்பவர்கள்
the evil
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளுக்கு
for them
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
(is) a punishment
عَذَابٌ
தண்டனை
severe
شَدِيدٌۖ
கடுமையான(து)
and (the) plotting
وَمَكْرُ
சூழ்ச்சி
(of) those
أُو۟لَٰٓئِكَ
அவர்களின்
it
هُوَ
அது
(will) perish
يَبُورُ
அழிந்துபோய்விடும்

Man kaana yureedul 'izzata falillaahil 'izzatu jamee'aa; ilaihi yas'adul kalimut taiyibu wal'amalus saalihu yarfa'uh; wallazeena yamkuroonas sayyiaati lahum 'azaabun shadeed; wa makru ulaaa'ika huwa yaboor (Fāṭir 35:10)

Abdul Hameed Baqavi:

எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.

English Sahih:

Whoever desires honor [through power] – then to Allah belongs all honor. To Him ascends good speech, and righteous work raises it. But they who plot evil deeds will have a severe punishment, and the plotting of those – it will perish. ([35] Fatir : 10)

1 Jan Trust Foundation

எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.