Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௯

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِيْ شَيْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا ࣖ   ( النساء: ٥٩ )

O you who believe[d]!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
Obey
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
and obey
وَأَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்
the Messenger
ٱلرَّسُولَ
தூதருக்கு
and those (having) authority
وَأُو۟لِى ٱلْأَمْرِ
இன்னும் அதிகாரிகளுக்கு
among you
مِنكُمْۖ
உங்களில்
Then if you disagree
فَإِن تَنَٰزَعْتُمْ
உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால்
in anything
فِى شَىْءٍ
ஒரு விஷயத்தில்
refer it
فَرُدُّوهُ
அதைத் திருப்புங்கள்
to
إِلَى
பக்கம்
Allah
ٱللَّهِ
அல்லாஹ்
and the Messenger
وَٱلرَّسُولِ
தூதர்
if you
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
believe
تُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
in Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வை
and the Day [the] Last
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
That
ذَٰلِكَ
இதுதான்
(is) best
خَيْرٌ
சிறந்தது
and more suitable
وَأَحْسَنُ
இன்னும் மிக அழகானது
(for final) determination
تَأْوِيلًا
முடிவால்

Yaaa aiyuhal lazeena aamanooo atee'ul laaha wa atee'ur Rasoola wa ulil amri minkum fa in tanaaza'tum fee shai'in faruddoohu ilal laahi war Rasooli in kuntum tu'minoona billaahi wal yawmil Aakhir; zaalika khairunw wa ahsanu taaweelaa (an-Nisāʾ 4:59)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டு மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையாகவும், அழகான முடிவாகவும் இருக்கும்.

English Sahih:

O you who have believed, obey Allah and obey the Messenger and those in authority among you. And if you disagree over anything, refer it to Allah and the Messenger, if you should believe in Allah and the Last Day. That is the best [way] and best in result. ([4] An-Nisa : 59)

1 Jan Trust Foundation

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.