நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) "எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்" என்று கூறுவார்கள்.
English Sahih:
And those who disbelieved will [then] say, "Our Lord, show us those who misled us of the jinn and men [so] we may put them under our feet that they will be among the lowest." ([41] Fussilat : 29)
1 Jan Trust Foundation
(அந்நாளில்|) காஃபிர்கள்| “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்:எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பி! அவர்கள் (-வழிகெடுத்த அந்த இரு சாரார்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கிக் கொள்கிறோம்.