Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa Meeem

ஹாமீம்.

Tafseer

تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதமாகும்
مِّنَ ٱلرَّحْمَٰنِ
பேரன்பாளனிடமிருந்து
ٱلرَّحِيمِ
பேரருளாளன்

Tanzeelum Minar-Rahmaanir-Raheem

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமா(கிய அல்லாஹ்வா)ல் இது இறக்கப்பட்டுள்ளது.

Tafseer

كِتَٰبٌ
வேதமாகும்
فُصِّلَتْ
விவரிக்கப்பட்டன
ءَايَٰتُهُۥ
இதன் வசனங்கள்
قُرْءَانًا
குர்ஆன்
عَرَبِيًّا
அரபி மொழியிலான
لِّقَوْمٍ
மக்களுக்காக
يَعْلَمُونَ
அறிகின்றார்கள்

Kitaabun fussilat Aayaatuhoo Qur-aanan 'Arabiyyal liqawminy ya'lamoon

இது (குர்ஆன் என்னும்) வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப் பட்டுள்ளன.

Tafseer

بَشِيرًا
நற்செய்தி கூறக்கூடியது
وَنَذِيرًا
அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியது
فَأَعْرَضَ
புறக்கணித்தனர்
أَكْثَرُهُمْ
அதிகமானோர் அவர்களில்
فَهُمْ
இன்னும் அவர்கள்
لَا يَسْمَعُونَ
செவியேற்பதில்லை

Basheeranw wa nazeeran fa-a'rada aksaruhum fahum laa yasma'oon

(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகின்றதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும் இருக்கின்றது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
قُلُوبُنَا
எங்கள் உள்ளங்கள்
فِىٓ أَكِنَّةٍ
திரைகளில்தான்
مِّمَّا تَدْعُونَآ
எதில்/நீர் எங்களை அழைக்கின்றீர்களோ
إِلَيْهِ
அதன் பக்கம்
وَفِىٓ ءَاذَانِنَا
இன்னும் எங்கள்செவிகளில்
وَقْرٌ
செவிட்டுத்தனம்
وَمِنۢ بَيْنِنَا
இன்னும் எங்களுக்கு மத்தியிலும்
وَبَيْنِكَ
உமக்கு மத்தியிலும்
حِجَابٌ
ஒரு திரை
فَٱعْمَلْ
ஆகவே நீர் செய்வீராக!
إِنَّنَا
நிச்சயமாக நாங்கள்
عَٰمِلُونَ
செய்வோம்

Wa qaaloo quloobunaa feee akinnatim mimmaa tad'oonaaa ilaihi wa feee aazaaninaa waqrunw wa mim baininaa wa bainika bijaabun fa'mal innanaa 'aamiloon

அன்றி, "நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ (அதனைக் கவனிக்க முடியாதபடி) எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீங்கள் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்களுடைய செவிகள் செவிடுபட்டுவிட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (விரும்பியதைச்) செய்து கொண்டிருங்கள். நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்" என்றும், (இதனை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
بَشَرٌ
ஒரு மனிதர்தான்
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَىَّ
எனக்கு
أَنَّمَآ إِلَٰهُكُمْ
உங்கள் கடவுள் எல்லாம்
إِلَٰهٌ وَٰحِدٌ
ஒரே ஒருகடவுள்தான்
فَٱسْتَقِيمُوٓا۟
ஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்!
إِلَيْهِ
அவன் பக்கமே
وَٱسْتَغْفِرُوهُۗ
இன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
وَوَيْلٌ لِّلْمُشْرِكِينَ
நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு

Qul innamaaa ana basharum mislukum yoohaaa ilaiya annamaaa ilaahukum Ilaahunw Waahidun fastaqeemooo ilaihi wastagfirooh; wa wailul lil mushrikeen

ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்களுடைய வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் மன்னிப்பையும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்.

Tafseer

ٱلَّذِينَ لَا
எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَهُم
இன்னும் அவர்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
هُمْ
அவர்கள்
كَٰفِرُونَ
நிராகரிக்கின்றனர்

Allazeena laa yu'toonaz Zakaata wa hum bil-Aakhiratihum kaafiroon

எவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லையோ அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தாம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
أَجْرٌ
நற்கூலி
غَيْرُ مَمْنُونٍ
முடிவற்ற(து)

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum ajrun ghairu mamnoon

(ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ (அவர்கள் மறுமையை நம்புபவர்கள்தாம்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு.

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ
நீங்கள் நிராகரிக்கின்றீர்களா?
بِٱلَّذِى خَلَقَ
படைத்தவனை
ٱلْأَرْضَ
பூமியை
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
وَتَجْعَلُونَ
இன்னும் ஏற்படுத்துகின்றீர்களா?
لَهُۥٓ
அவனுக்கு
أَندَادًاۚ
இணைகளை
ذَٰلِكَ
அவன்தான்
رَبُّ
இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qul a'innakum latakfuroona billazee khalaqal arda fee yawmaini wa taj'aloona lahooo andaadaa; zaalika Rabbul 'aalameen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவைகளை) அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்."

Tafseer

وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
فِيهَا
அதில்
رَوَٰسِىَ
மலைகளை
مِن فَوْقِهَا
அதற்கு மேலாக
وَبَٰرَكَ
இன்னும் அருள்வளம் புரிந்தான்
فِيهَا
அதில்
وَقَدَّرَ
இன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான்
فِيهَآ
அதில்
أَقْوَٰتَهَا
அதன் உணவுகளை
فِىٓ أَرْبَعَةِ
நான்கு
أَيَّامٍ
நாள்களில்
سَوَآءً
சரியான பதிலாக
لِّلسَّآئِلِينَ
விசாரிப்பவர்களுக்கு

Wa ja'ala feehaa rawaa siya min fawqihaa wa baaraka feehaa wa qaddara feehaaaa aqwaatahaa feee arba'ati ayyaamin sawaaa'al lissaaa'ileen

அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். அன்றி, அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா
القرآن الكريم:فصلت
ஸஜ்தா (سجدة):38
ஸூரா (latin):Fussilat
ஸூரா:41
வசனம்:54
Total Words:796
Total Characters:3350
Number of Rukūʿs:6
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:61
Starting from verse:4218