Skip to main content

وَإِذَآ أَنْعَمْنَا
நாம் அருள் புரிந்தால்
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதன் மீது
أَعْرَضَ
புறக்கணித்து செல்கிறான்
وَنَـَٔا بِجَانِبِهِۦ
தூரமாகி விடுகிறான்
وَإِذَا مَسَّهُ
இன்னும் அவனுக்குநிகழ்ந்தால்
ٱلشَّرُّ
தீங்கு
فَذُو دُعَآءٍ
பிரார்த்தனை உடையவனாக
عَرِيضٍ
மிக அதிகமான

Wa izaaa an'amnaa 'alal insaani a'rada wa na-aa bijaani bihee wa izaa massahush sharru fazoo du'aaa'in 'areed

மனிதனுக்கு நாம் (யாதொரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) நம்மை(யும் நம்முடைய கட்டளைகளையும்) புறக்கணித்து நம்மிலிருந்தும் விலகி விடுகின்றான். அவனை யாதொரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல நீளமான பிரார்த்தனை செய்(து அதனை நீக்குமாறு நம்மிடம் கோரு)கின்றான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَرَءَيْتُمْ
நீங்கள் அறிவியுங்கள்
إِن كَانَ
இருந்தால்
مِنْ عِندِ
அல்லாஹ்விடமிருந்து
ثُمَّ
பிறகு
كَفَرْتُم
நீங்கள் நிராகரித்து விட்டால்
بِهِۦ مَنْ
அதை/யார்?
أَضَلُّ
மிகப் பெரிய வழிகேடன்
مِمَّنْ
ஒருவனைவிட
هُوَ
அவன்
فِى شِقَاقٍۭ
முரண்பாட்டில்
بَعِيدٍ
வெகு தூரமான

Qul araiaitum in kaana min 'indil laahi summa kafar tum bihee man adallu mimman huwa fee shiqaqim ba'eed

"(இவ்வேதம் உண்மையாகவே) அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதனை நீங்கள் நிராகரித்துவிட்டால் (அதற்குக்) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள்.

Tafseer

سَنُرِيهِمْ
விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்
ءَايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
فِى ٱلْءَافَاقِ
பல பகுதிகளிலும்
وَفِىٓ أَنفُسِهِمْ
அவர்களிலும்
حَتَّىٰ
இறுதியாக
يَتَبَيَّنَ
தெளிவாகிவிடும்
لَهُمْ
அவர்களுக்கு
أَنَّهُ
நிச்சயமாக இதுதான்
ٱلْحَقُّۗ
உண்மை
أَوَلَمْ يَكْفِ
போதாதா?
بِرَبِّكَ
உமது இறைவனுக்கு
أَنَّهُۥ
நிச்சயமாக தான்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
شَهِيدٌ
நன்கு பார்ப்பவனாக

Sanureehim Aayaatinaa fil aafaaqi wa feee anfusihim hattaa yatabaiyana lahum annahul haqq; awa lam yakfi bi Rabbika annahoo 'alaa kulli shai-in Shaheed

நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது (உங்களுக்கு) போதாதா?

Tafseer

أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில் இருக்கின்றனர்
مِّن لِّقَآءِ
சந்திப்பதில்
رَبِّهِمْۗ
தங்கள் இறைவனை
أَلَآ
அறிந்து கொள்ளுங்கள்!
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
مُّحِيطٌۢ
சூழ்ந்தவன்

Alaaa innahum fee miryatim mil liqaaa'i Rabbihim; alaaa innahoo bikulli shai'im muheet

நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கின்றான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.

Tafseer