Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௧௪

وَمَا تَفَرَّقُوْٓا اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَهُمُ الْعِلْمُ بَغْيًاۢ بَيْنَهُمْۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى لَّقُضِيَ بَيْنَهُمْۗ وَاِنَّ الَّذِيْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْۢ بَعْدِهِمْ لَفِيْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ   ( الشورى: ١٤ )

And not they became divided
وَمَا تَفَرَّقُوٓا۟
அவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லை
until
إِلَّا
தவிர
after after [what]
مِنۢ بَعْدِ مَا
வந்ததன் பின்னரே
came to them
جَآءَهُمُ
தங்களிடம்
the knowledge
ٱلْعِلْمُ
கல்வி
(out of) rivalry
بَغْيًۢا
பொறாமையினால்தான்
among them
بَيْنَهُمْۚ
தங்களுக்கு மத்தியில்
And if not
وَلَوْلَا
இருக்கவில்லை என்றால்
(for) a word
كَلِمَةٌ
ஒரு வாக்கு
(that) preceded
سَبَقَتْ
முந்தி(யது)
from your Lord
مِن رَّبِّكَ
உமது இறைவன் புறத்தில் இருந்து
for a term
إِلَىٰٓ أَجَلٍ
ஒரு தவணை வரை
specified
مُّسَمًّى
குறிப்பிட்ட
surely, it (would have) been settled
لَّقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
between them
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
And indeed
وَإِنَّ
நிச்சயமாக
those who were made to inherit
ٱلَّذِينَ أُورِثُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
the Book
ٱلْكِتَٰبَ
வேதம்
after them
مِنۢ
பின்னர்
after them
بَعْدِهِمْ
பின்னர் இவர்களுக்கு
(are) surely in doubt
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்
concerning it
مِّنْهُ
அதில்
disquieting
مُرِيبٍ
பெரிய

Wa maa tafarraqooo illaa mim ba'di maa jaaa'ahumul 'ilmu baghyam bainahum; wa law laa Kalimatun sabaqat mir Rabbika ilaaa ajalim musammal laqudiya bainahum; wa innal lazeena oorisul Kitaaba mim ba'dihim lafee shakkim minhu mureeb (aš-Šūrā 42:14)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்களிடம் வேதம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உங்களது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிவுபெற்றே இருக்கும். தவிர, அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்தை எவர்கள் அனந்தரம் கொண்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

English Sahih:

And they did not become divided until after knowledge had come to them – out of jealous animosity between themselves. And if not for a word that preceded from your Lord [postponing the penalty] until a specified time, it would have been concluded between them. And indeed, those who were granted inheritance of the Scripture after them are, concerning it, in disquieting doubt. ([42] Ash-Shuraa : 14)

1 Jan Trust Foundation

அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.