Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa Meeem

ஹாமீம்.

Tafseer

عٓسٓقٓ
அய்ன் சீன் காஃப்

'Ayyyn Seeen Qaaaf

அய்ன் ஸீன் காஃப்.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يُوحِىٓ
வஹீ அறிவித்தான்
إِلَيْكَ
உமக்கும்
وَإِلَى ٱلَّذِينَ
உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْعَزِيزُ
மிகைத்தவனும்
ٱلْحَكِيمُ
மகா ஞானவானும்

Kazaalika yooheee ilaika wa ilal lazeena min qablikal laahul 'Azeezul Hakeem

(நபியே! இந்த அத்தியாயம் உங்களுக்கு அருள் செய்யப்படுகின்றது.) இவ்வாறே உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானமிக்கவனுமான அல்லாஹ் (தன்னுடைய வசனங்களை) வஹீ மூலம் அறிவித்து வந்திருக்கின்றான்.

Tafseer

لَهُۥ
அவனுக்குத்தான்
مَا فِى
வானங்களில் உள்ளவையும்
وَمَا فِى
பூமியில்உள்ளவையும்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
ٱلْعَظِيمُ
மிக மகத்தானவன்

Lahoo maa fis samaa waati wa maa fil ardi wa Huwal 'Aliyul 'Azeem

வானங்களில் இருப்பவைகளும், பூமியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. (அனைவரையும்விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன்.

Tafseer

تَكَادُ
நெருங்கி விடுகின்றன
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
يَتَفَطَّرْنَ
(அவை) பிளந்துவிடுவதற்கு
مِن فَوْقِهِنَّۚ
அவற்றுக்கு மேல் உள்ள
وَٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
بِحَمْدِ
புகழ்ந்து
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
وَيَسْتَغْفِرُونَ
இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர்
لِمَن فِى
பூமியில் உள்ளவர்களுக்காக
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்தான்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
ٱلرَّحِيمُ
மகாக் கருணையாளன்

Takaadus samaawaatu yatafattarna min fawqihinn; walmalaaa'ikatu yusabbihoona bihamdi Rabbihim wa yastaghfiroona liman fil ard; alaaa innal laaha huwal Ghafoorur Raheem

(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) மலக்குகளும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
أَوْلِيَآءَ
உதவியாளர்களாக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
حَفِيظٌ
கண்காணிப்பவன்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَمَآ أَنتَ
நீர் இல்லை
عَلَيْهِم
அவர்கள் மீது
بِوَكِيلٍ
பொறுப்பாளர்

Wallazeenat takhazoo min dooniheee awliyaaa'al laahu hafeezun 'alaihim wa maaa anta 'alaihim biwakeel

எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலராக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கவனித்தவனாக இருக்கின்றான். (நபியே!) அவர்களுக்கு நீங்கள் பொறுப்பாளரல்ல.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
قُرْءَانًا
குர்ஆனை
عَرَبِيًّا
அரபி மொழியில்
لِّتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
أُمَّ ٱلْقُرَىٰ
மக்காவாசிகளை
وَمَنْ حَوْلَهَا
இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
وَتُنذِرَ
இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
يَوْمَ
மறுமை நாளைப் பற்றி
ٱلْجَمْعِ
ஒன்று சேர்க்கப்படும்
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِۚ فَرِيقٌ
அதில்/ஓர் அணி
فِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
وَفَرِيقٌ
இன்னும் ஓர் அணி
فِى ٱلسَّعِيرِ
நரகத்தில்

Wa kazaalika awhainaaa llaika Qur-aanan 'Arabiyyal litunzir aUmmal Quraa wa man hawlahaa wa tunzira Yawmal Jam'ilaa raiba feeh; fareequn fil jannati wa fareequn fissa'eer

(நபியே!) இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்தோம். (இதனைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சூழ்ந்த கிராமங்களில் வசிப்பவர்களையும், நீங்கள் எச்சரிக்கை செய்து அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று சேரக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுங்கள்! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனபதிக்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.

Tafseer

وَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَجَعَلَهُمْ
அவர்களை ஆக்கியிருப்பான்
أُمَّةً
மார்க்கமுடையவர்களாக
وَٰحِدَةً
ஒரே ஒரு
وَلَٰكِن
என்றாலும்
يُدْخِلُ
நுழைக்கின்றான்
مَن يَشَآءُ
தான் நாடியவர்களை
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
وَٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
مِّن وَلِىٍّ
எந்த பாதுகாவலரும்
وَلَا نَصِيرٍ
எந்த உதவியாளரும் இல்லை

Wa law shaaa'al laahu laja'alahum ummatanw waahi datanw walaakiny yudkhilumany yashaaa'u fee rahmatih; waz zaalimoona maa lahum minw waliyyinw wa laa naseer

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை.

Tafseer

أَمِ ٱتَّخَذُوا۟
அவர்கள் எடுத்துக் கொண்டார்களா?
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
أَوْلِيَآءَۖ
பாதுகாவலர்களை
فَٱللَّهُ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْوَلِىُّ
பாதுகாவலன்
وَهُوَ
இன்னும் அவன்தான்
يُحْىِ
உயிர்ப்பிப்பான்
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
وَهُوَ
இன்னும் அவன்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Amit takhazoo min dooniheee awliyaaa'a fallaahu Huwal Waliyyu wa Huwa yuhyil mawtaa wa Huwa 'alaa kulli shai'in Qadeer

(நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் ஒருவன்தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

Tafseer

وَمَا ٱخْتَلَفْتُمْ
எது/முரண்படுகிறீர்களோ/அதில்
مِن شَىْءٍ
எந்த ஒரு விஷயம்
فَحُكْمُهُۥٓ
அதன் இறுதி தீர்ப்பு
إِلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் பக்கம்தான்
ذَٰلِكُمُ ٱللَّهُ
அந்த அல்லாஹ்தான்
رَبِّى
என் இறைவன்
عَلَيْهِ
அவன் மீதே
تَوَكَّلْتُ
நம்பிக்கை வைத்துள்ளேன்
وَإِلَيْهِ
இன்னும் அவன் பக்கமே
أُنِيبُ
திரும்புகின்றேன்

Wa makh-talaftum feehi min shai'in fahukmuhooo ilallaah; zaalikumul laahu Rabbee 'alaihi tawakkaltu wa ilaihi uneeb

(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பியும் அவனையே நான் நோக்கியும் நிற்கின்றேன்."

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஷ் ஷூறா
القرآن الكريم:الشورى
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Asy-Syura
ஸூரா:42
வசனம்:53
Total Words:860
Total Characters:3588
Number of Rukūʿs:5
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:62
Starting from verse:4272