Skip to main content

ஸூரத்துஷ் ஷூறா வசனம் ௭

وَكَذٰلِكَ اَوْحَيْنَآ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ ۗفَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ   ( الشورى: ٧ )

And thus
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
We have revealed
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
to you
إِلَيْكَ
உமக்கு
a Quran
قُرْءَانًا
குர்ஆனை
(in) Arabic
عَرَبِيًّا
அரபி மொழியில்
that you may warn
لِّتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
(the) mother (of) the towns
أُمَّ ٱلْقُرَىٰ
மக்காவாசிகளை
and whoever (is) around it
وَمَنْ حَوْلَهَا
இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
and warn
وَتُنذِرَ
இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
(of the) Day
يَوْمَ
மறுமை நாளைப் பற்றி
(of) Assembly
ٱلْجَمْعِ
ஒன்று சேர்க்கப்படும்
(there is) no doubt
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
in it A party
فِيهِۚ فَرِيقٌ
அதில்/ஓர் அணி
(will be) in Paradise
فِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
and a party
وَفَرِيقٌ
இன்னும் ஓர் அணி
in the Blazing Fire
فِى ٱلسَّعِيرِ
நரகத்தில்

Wa kazaalika awhainaaa llaika Qur-aanan 'Arabiyyal litunzir aUmmal Quraa wa man hawlahaa wa tunzira Yawmal Jam'ilaa raiba feeh; fareequn fil jannati wa fareequn fissa'eer (aš-Šūrā 42:7)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்தோம். (இதனைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சூழ்ந்த கிராமங்களில் வசிப்பவர்களையும், நீங்கள் எச்சரிக்கை செய்து அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று சேரக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுங்கள்! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனபதிக்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.

English Sahih:

And thus We have revealed to you an Arabic Quran that you may warn the Mother of Cities [i.e., Makkah] and those around it and warn of the Day of Assembly, about which there is no doubt. A party will be in Paradise and a party in the Blaze. ([42] Ash-Shuraa : 7)

1 Jan Trust Foundation

அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.