Skip to main content

وَمَا كَانَ
முடியாது
لِبَشَرٍ
ஒரு மனிதருக்கு
أَن يُكَلِّمَهُ
அவரிடம் நேரடியாகபேசுவது
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّا وَحْيًا
தவிர/வஹீ அறிவிப்பதன் மூலம்
أَوْ
அல்லது
مِن وَرَآئِ
பின்னால் இருந்து
حِجَابٍ
திரைக்கு
أَوْ
அல்லது
يُرْسِلَ
அனுப்புவான்
رَسُولًا
ஒரு தூதரை
فَيُوحِىَ
வஹீ அறிவிப்பான்
بِإِذْنِهِۦ
தனது உத்தரவின்படி
مَا يَشَآءُۚ
தான் நாடுவதை
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
عَلِىٌّ
மிக உயர்ந்தவன்
حَكِيمٌ
மகா ஞானவான்

Wa maa kaana libasharin any yukallimahul laahu illaa wahyan aw minw waraaa'i hijaabin aw yursila Rasoolan fa yoohiya bi iznuhee maa yashaaa'; innahoo 'Aliyyun Hakeem

அல்லாஹ் (நேருக்கு நேராய்ப்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒரு வருக்குமில்லை. எனினும், வஹீயின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது மலக்குகளை அனுப்பி வைத்து வஹீயின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கின்றான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடைய வனுமாவான்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
رُوحًا
அருளாக
مِّنْ أَمْرِنَاۚ
நமதுகட்டளையினால்
مَا كُنتَ
நீர் இருக்கவில்லை
تَدْرِى
அறிந்தவராக
مَا ٱلْكِتَٰبُ
வேதம் என்றால் என்ன
وَلَا ٱلْإِيمَٰنُ
ஈமான் என்றால் என்ன
وَلَٰكِن
எனினும்
جَعَلْنَٰهُ
நாம் இதை ஆக்கினோம்
نُورًا
ஓர் ஒளியாக
نَّهْدِى
நாம் நேர்வழி காட்டுகின்றோம்
بِهِۦ
இதன் மூலம்
مَن نَّشَآءُ
நாம் நாடுகின்றவர்களுக்கு
مِنْ عِبَادِنَاۚ
நமது அடியார்களில்
وَإِنَّكَ
நிச்சயமாக நீர்
لَتَهْدِىٓ
நேர்வழி காட்டுகின்றீர்
إِلَىٰ
பக்கம்
صِرَٰطٍ
பாதையின்
مُّسْتَقِيمٍ
நேரான

Wa kazaalika awhainaaa ilaika rooham min amrinaa; maa kunta tadree mal Kitaabu wa lal eemaanu wa laakin ja'alnaahu nooran nahdee bihee man nashaaa'u min 'ibaadinaa; wa innaka latahdeee ilaaa Siraatim Mustaqeem

(நபியே!) இவ்வாறே உங்களுக்கு நம்முடைய கட்டளையை வஹீயின் மூலமாக அறிவிக்கின்றோம். (இதற்கு முன்னர்) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதனைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கின்றோம். (நபியே!) நிச்சயமாக நீங்கள் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கின்றீர்கள்.

Tafseer

صِرَٰطِ
பாதையின் பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
لَهُۥ
அவனுக்கே
مَا فِى
வானங்களில் உள்ளவை
وَمَا فِى
இன்னும் பூமியில் உள்ளவை(யும்)
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கமே
تَصِيرُ
திரும்புகின்றன
ٱلْأُمُورُ
காரியங்கள்

Siraatil laahil lazee lahoo maa fis samaawaati wa maa fil ard; alaaa ilal laahi taseerul umoor

அதுதான் அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும், பூமியிலும் இருப்பவைகள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமான வைகளே. சகல காரியங்களும் அவனிடம் வந்தே தீரும் என்பதை (நபியே!) நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்!

Tafseer