Skip to main content

ஸூரத்துல் ஹஷ்ர் வசனம் ௧௨

لَىِٕنْ اُخْرِجُوْا لَا يَخْرُجُوْنَ مَعَهُمْۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا يَنْصُرُوْنَهُمْۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَيُوَلُّنَّ الْاَدْبَارَۙ ثُمَّ لَا يُنْصَرُوْنَ   ( الحشر: ١٢ )

If they are expelled
لَئِنْ أُخْرِجُوا۟
அவர்கள் வெளியேற்றப்பட்டால்
not they will leave
لَا يَخْرُجُونَ
இவர்கள் வெளியேற மாட்டார்கள்
with them
مَعَهُمْ
அவர்களுடன்
and if they are fought
وَلَئِن قُوتِلُوا۟
அவர்கள் போர் செய்யப்பட்டால்
not they will help them
لَا يَنصُرُونَهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்
And if they help them
وَلَئِن نَّصَرُوهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவினாலும்
certainly they will turn (their) backs;
لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ
இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்
then not they will be helped
ثُمَّ لَا يُنصَرُونَ
பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்

La'in ukhrijoo laa yakhrujoona ma'ahum wa la'in qootiloo laa yansuroonahum wa la'in nasaroohum la yuwallunnal adbaara summa laa yunsaroon (al-Ḥašr 59:12)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்.

English Sahih:

If they are expelled, they will not leave with them, and if they are fought, they will not aid them. And [even] if they should aid them, they will surely turn their backs; then [thereafter] they will not be aided. ([59] Al-Hashr : 12)

1 Jan Trust Foundation

அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.