Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௮

قُلْ لَّآ اَمْلِكُ لِنَفْسِيْ نَفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗوَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِۛ وَمَا مَسَّنِيَ السُّوْۤءُ ۛاِنْ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ   ( الأعراف: ١٨٨ )

Say
قُل
கூறுவீராக
"Not "I have power
لَّآ أَمْلِكُ
நான் உரிமை பெறமாட்டேன்
for myself
لِنَفْسِى
எனக்கு
(to) benefit
نَفْعًا
எந்த ஒரு பலனையும்
and no (power to) harm
وَلَا ضَرًّا
எந்த ஒரு கெடுதியையும்
except
إِلَّا
தவிர
what wills
مَا شَآءَ
எதை/நாடினான்
Allah
ٱللَّهُۚ
அல்லாஹ்
And if I would
وَلَوْ كُنتُ
நான் இருந்திருந்தால்
know
أَعْلَمُ
அறிபவனாக
(of) the unseen
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
surely I could have multiplied
لَٱسْتَكْثَرْتُ
அதிகம்பெற்றிருப்பேன்
of the good
مِنَ ٱلْخَيْرِ
நன்மையில்
and not (could) have touched me
وَمَا مَسَّنِىَ
என்னை தீண்டி இருக்காது
the evil
ٱلسُّوٓءُۚ
தீங்கு
Not (am) I
إِنْ أَنَا۠
நான் இல்லை
except
إِلَّا
தவிர
a warner
نَذِيرٌ
எச்சரிப்பவராக
and a bearer of good tidings
وَبَشِيرٌ
இன்னும் நற்செய்தி கூறுபவராக
to a people
لِّقَوْمٍ
மக்களுக்கு
who believe"
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Qul laaa amliku linafsee naf'anw wa laa darran illaa maa shaaa'al laah; wa law kuntu a'alamul ghaiba lastaksartu minal khairi wa maa massaniyas soo'; in ana illaa nazeerunw wa basheerul liqawminy yu'minoon (al-ʾAʿrāf 7:188)

Abdul Hameed Baqavi:

(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை."

English Sahih:

Say, "I hold not for myself [the power of] benefit or harm, except what Allah has willed. And if I knew the unseen, I could have acquired much wealth, and no harm would have touched me. I am not except a warner and a bringer of good tidings to a people who believe." ([7] Al-A'raf : 188)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”