وَاِذَا لَمْ تَأْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَاۗ قُلْ اِنَّمَآ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَيَّ مِنْ رَّبِّيْۗ هٰذَا بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ( الأعراف: ٢٠٣ )
Wa izaa lam taatihim bi aayatin qaaloo law lajtabai tahaa; qul innamaaa attabi'u maa yoohaaa ilaiya mir Rabbee; haazaa basaaa'iru mir Rabbikum wa hudanw wa rahmatul liqawminy yu'minoon (al-ʾAʿrāf 7:203)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) "இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது.
English Sahih:
And when you, [O Muhammad], do not bring them a sign [i.e., miracle], they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Quran] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe." ([7] Al-A'raf : 203)
1 Jan Trust Foundation
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், “நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?” என்று கேட்பார்கள்; (நீர் கூறும்|) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.