Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௫

لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِيْ مَوَاطِنَ كَثِيْرَةٍۙ وَّيَوْمَ حُنَيْنٍۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْـًٔا وَّضَاقَتْ عَلَيْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُّدْبِرِيْنَۚ  ( التوبة: ٢٥ )

Verily
لَقَدْ
திட்டவட்டமாக
Allah helped you
نَصَرَكُمُ
உதவினான் உங்களுக்கு
Allah helped you
ٱللَّهُ
அல்லாஹ்
in regions
فِى مَوَاطِنَ
போர்க்களங்களில்
many
كَثِيرَةٍۙ
அதிகமான
and (on the) day
وَيَوْمَ
இன்னும் அன்று
(of) Hunain
حُنَيْنٍۙ
ஹுனைன்
when pleased you
إِذْ أَعْجَبَتْكُمْ
போது/பெருமைப்படுத்தியது/உங்களை
your multitude
كَثْرَتُكُمْ
நீங்கள் அதிகமாக இருப்பது
but not availed
فَلَمْ تُغْنِ
பலன் தரவில்லை
you anything
عَنكُمْ شَيْـًٔا
உங்களுக்கு/எதையும்
and (was) straitened
وَضَاقَتْ
இன்னும் நெருக்கடியாகி விட்டது
for you
عَلَيْكُمُ
உங்கள் மீது
the earth
ٱلْأَرْضُ
பூமி
(in spite) of its vastness (in spite) of its vastness
بِمَا رَحُبَتْ
அது விசாலமாக இருந்தும்
then
ثُمَّ
பிறகு
you turned back
وَلَّيْتُم
திரும்பினீர்கள்
fleeing
مُّدْبِرِينَ
புறமுதுகு காட்டியவர்களாக

Laqad nasarakumul laahu fee mawaatina kaseeratinw wa yawma Hunainin iz a'jabatkum kasratukum falam tughni 'ankum shai'anw wa daaqat 'alaikumul ardu bimaa rahubat summa wallaitum mudbireen (at-Tawbah 9:25)

Abdul Hameed Baqavi:

பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு யாதொரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.

English Sahih:

Allah has already given you victory in many regions and [even] on the day of Hunayn, when your great number pleased you, but it did not avail you at all, and the earth was confining for you with [i.e., in spite of] its vastness; then you turned back, fleeing. ([9] At-Tawbah : 25)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்|) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.