Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௨௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا ۚوَاِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيْكُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖٓ اِنْ شَاۤءَۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ حَكِيْمٌ   ( التوبة: ٢٨ )

O you who believe! O you who believe! O you who believe!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
Indeed
إِنَّمَا
எல்லாம்
the polytheists
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
(are) unclean
نَجَسٌ
அசுத்தமானவர்கள்
so let them not come near so let them not come near
فَلَا يَقْرَبُوا۟
நெருங்கக் கூடாது
Al-Masjid Al-Haraam
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதை
Al-Masjid Al-Haraam
ٱلْحَرَامَ
புனிதமானது
after
بَعْدَ
பின்னர்
this, their (final) year this, their (final) year
عَامِهِمْ هَٰذَاۚ
அவர்களுடைய ஆண்டு/இந்த
And if you fear
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
poverty
عَيْلَةً
வறுமையை
then soon Allah will enrich you
فَسَوْفَ يُغْنِيكُمُ
நிறைவாக்குவான்/உங்களை
Allah will enrich you
ٱللَّهُ
அல்லாஹ்
from His Bounty
مِن فَضْلِهِۦٓ
தனது அருளினால்
if He wills
إِن شَآءَۚ
நாடினால்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) All-Knower
عَلِيمٌ
நன்கறிந்தவன்
All-Wise
حَكِيمٌ
ஞானவான்

Yaaa aiyuhal lazeena aamanooo innamal mushrikoona najasun falaa yaqrabul Masjidal Haraama ba'da 'aamihim haaza; wa in khiftum 'ailatan fasawfa yughnee kumul laahu min fadliheee in shaaa'; innallaaha 'Aleemun hakeem (at-Tawbah 9:28)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இப்பள்ளியை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடை செய்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் நின்று உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைப் பற்றி பாதகமில்லை.) அல்லாஹ் நாடினால், அதிசீக்கிரத்தில் தன் அருளைக்கொண்டு உங்களை செல்வந்தர்கள் ஆக்கி விடுவான் (என்பதை அறிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

O you who have believed, indeed the polytheists are unclean, so let them not approach al-Masjid al-Haram after this, their [final] year. And if you fear privation, Allah will enrich you from His bounty if He wills. Indeed, Allah is Knowing and Wise. ([9] At-Tawbah : 28)

1 Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.