Skip to main content

ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௪

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖۗ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ   ( يونس: ٥٤ )

And if that
وَلَوْ أَنَّ
இருந்தால்
for every soul
لِكُلِّ نَفْسٍ
ஒவ்வோர் ஆன்மாவிற்கும்
(that) wronged
ظَلَمَتْ
அநியாயம் செய்தது
whatever (is) in the earth
مَا فِى ٱلْأَرْضِ
எவை/பூமியில்
it (would) seek to ransom
لَٱفْتَدَتْ
பரிகாரமாகக் கொடுத்துவிடும்
with it
بِهِۦۗ
அவற்றை
and they (will) confide
وَأَسَرُّوا۟
இன்னும் மறைத்துக் கொள்வார்கள்
the regret
ٱلنَّدَامَةَ
துக்கத்தை
when they see
لَمَّا رَأَوُا۟
போது/அவர்கள் கண்டனர்
the punishment
ٱلْعَذَابَۖ
வேதனையை
But will be judged
وَقُضِىَ
இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது
between them
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
in justice and they
بِٱلْقِسْطِۚ وَهُمْ
நீதமாக/அவர்கள்
(will) not (be) wronged
لَا يُظْلَمُونَ
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

Wa law anna likulli nafsin zalamat maa fil ardi laftadat bih; wa asarrun nadaamata lammaa ra awul 'azaab, wa qudiya bainahum bilqist; wa hum laa yuzlamoon (al-Yūnus 10:54)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் அநியாயம் செய்த ஒவ்வொரு ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்து விடக் கருதும்! தவிர, தன்னுடைய துக்கத்தை மறைத்துக்கொள்ளவும் கருதும். (அந்நாளில்) அவைகளுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவை அநியாயம் செய்யப்பட மாட்டாது.

English Sahih:

And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged. ([10] Yunus : 54)

1 Jan Trust Foundation

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.