அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவனாக இருக்கிறான். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
English Sahih:
And what will be the supposition of those who invent falsehood about Allah on the Day of Resurrection? Indeed, Allah is the possessor of bounty for the people, but most of them are not grateful. ([10] Yunus : 60)
1 Jan Trust Foundation
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம் மறுமை நாளில் என்ன? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன். எனினும் அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்.