ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَاۤءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ۗ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ ( يونس: ٧٤ )
Summma ba'asnaa mim ba'dihee Rusulan ilaa qawmihim fajaaa'oohum bilbaiyinaati famaa kaanoo liyu'minoo bimaa kazzaboo bihee min qabl; kazaalika natba'u 'alaa quloobil mu'tadeen (al-Yūnus 10:74)
Abdul Hameed Baqavi:
அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவை(களான உண்மை)களை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்கவில்லை. வரம்பு மீறும் இத்தகையவர் களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.
English Sahih:
Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before. Thus We seal over the hearts of the transgressors. ([10] Yunus : 74)
1 Jan Trust Foundation
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.