Skip to main content

ஸூரத்து ஹூது வசனம் ௩௮

وَيَصْنَعُ الْفُلْكَۗ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ۗقَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَۗ   ( هود: ٣٨ )

And he was constructing
وَيَصْنَعُ
அவர் செய்கிறார்
the ship
ٱلْفُلْكَ
கப்பலை
and every time passed
وَكُلَّمَا مَرَّ
கடந்தபோதெல்லாம்
by him
عَلَيْهِ
அவருக்கு அருகில்
(the) chiefs
مَلَأٌ
முக்கிய பிரமுகர்கள்
of
مِّن
இருந்து
his people
قَوْمِهِۦ
அவருடைய மக்கள்
they ridiculed
سَخِرُوا۟
பரிகசித்தனர்
[of] him He said
مِنْهُۚ قَالَ
அவரை/கூறினார்
"If you ridicule
إِن تَسْخَرُوا۟
நீங்கள் பரிகசித்தால்
us
مِنَّا
எங்களை
then we
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
can ridicule
نَسْخَرُ
பரிகசிப்போம்
you
مِنكُمْ
உங்களை
as you ridicule
كَمَا تَسْخَرُونَ
நீங்கள் பரிகசிப்பது போன்று

Wa yasn'ul fulka wa kullamaa marra 'alaihi malaum min qawmihee sakhiroo minh; qaala in taskharoo minnaa fa innaa naskharu minkum kamaa taskharoon (Hūd 11:38)

Abdul Hameed Baqavi:

அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் "நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்றும் கூறினார்.

English Sahih:

And he constructed the ship, and whenever an assembly of the eminent of his people passed by him, they ridiculed him. He said, "If you ridicule us, then we will ridicule you just as you ridicule. ([11] Hud : 38)

1 Jan Trust Foundation

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்| “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.