Hattaaa izas tai'asar Rusulu wa zannooo annahum qad kuziboo jaaa'ahum nas runaa fanujjiya man nashaaa'u wa laa yuraddu baasunna 'anil qawmil mujrimeen (Yūsuf 12:110)
நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை இழந்துவிடும் வரையிலும் (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம். பின்னர்) நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் வேதனையை குற்றம் செய்யும் மக்களை விட்டு எவராலும் நீக்கிவிட முடியாது.
English Sahih:
[They continued] until, when the messengers despaired and were certain that they had been denied, there came to them Our victory, and whoever We willed was saved. And Our punishment cannot be repelled from the people who are criminals. ([12] Yusuf : 110)
1 Jan Trust Foundation
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைய, நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் என்று (மக்கள்) எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-தூதர்களை) வந்த(டைந்த)து. நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் தண்டனை பாவிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது.