Skip to main content

ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௨

ذٰلِكَ لِيَعْلَمَ اَنِّيْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِيْ كَيْدَ الْخَاۤىِٕنِيْنَ ۔  ( يوسف: ٥٢ )

That
ذَٰلِكَ
அது
he may know
لِيَعْلَمَ
அவர் அறிவதற்காக
that I not [I] betray him
أَنِّى لَمْ أَخُنْهُ
நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை
in secret
بِٱلْغَيْبِ
மறைவில்
and that
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(does) not guide
لَا يَهْدِى
நல்வழி படுத்த மாட்டான்
(the) plan
كَيْدَ
சூழ்ச்சியை
(of) the betrayers"
ٱلْخَآئِنِينَ
துரோகிகளின்

Zaalika liya'lama annee lam akhunhu bilghaibi wa annal laaha laa yahdee kaidal khaaa'ineen (Yūsuf 12:52)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கேள்வியுற்ற யூஸுஃப் "முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணைச் செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என் (பதை அறிவிப்)பதற்காகவுமே" (என்று கூறினார்).

English Sahih:

That is so he [i.e., al-Azeez] will know that I did not betray him in [his] absence and that Allah does not guide the plan of betrayers. ([12] Yusuf : 52)

1 Jan Trust Foundation

இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.