அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை.
English Sahih:
Allah extends provision for whom He wills and restricts [it]. And they rejoice in the worldly life, while the worldly life is not, compared to the Hereafter, except [brief] enjoyment. ([13] Ar-Ra'd : 26)
1 Jan Trust Foundation
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்க்கை வசதியை விரிவுபடுத்துகிறான். (தான் நாடுகின்றவர்களுக்கு அதை) சுருக்குகிறான். (நிராகரிப்பவர்கள்) உலக வாழ்வைக் கொண்டு மகிழ்கின்றனர். உலக வாழ்வு மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும் போது) ஒரு (சொற்ப) சுகமே தவிர வேறில்லை.