Skip to main content

ஸூரத்துல் ஹிஜ்ர் வசனம் ௮௮

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ   ( الحجر: ٨٨ )

(Do) not extend
لَا تَمُدَّنَّ
கண்டிப்பாக நீட்டாதீர்
your eyes
عَيْنَيْكَ
உம் இரு கண்களை
towards
إِلَىٰ
பக்கம்
what We have bestowed
مَا مَتَّعْنَا
எதை/சுகமளித்தோம்
with it
بِهِۦٓ
அதைக் கொண்டு
(to) categories
أَزْوَٰجًا
சில வகையினர்களுக்கு
of them
مِّنْهُمْ
இவர்களில்
and (do) not grieve
وَلَا تَحْزَنْ
இன்னும் கவலைப்படாதீர்
over them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
And lower
وَٱخْفِضْ
இன்னும் தாழ்த்துவீராக
your wing
جَنَاحَكَ
உமது புஜத்தை
to the believers
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Laa tamuddanna 'ainaika ilaa maa matta 'naa biheee azwaajam minhum wa laa tahzan 'alaihim wakhfid janaahaka lilmu 'mineen (al-Ḥijr 15:88)

Abdul Hameed Baqavi:

(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவைகளின் பக்கம் நீங்கள் உங்கள் இரு கண்களையும் நீட்டாதீர்கள்; நீங்கள் இவர்களுக்காக கவலையும் படாதீர்கள். எனினும், நீங்கள்நம்பிக்கையாளர்களுக்கு உங்களது பணிவான அன்பைக் காட்டுங்கள்.

English Sahih:

Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of them [i.e., the disbelievers], and do not grieve over them. And lower your wing [i.e., show kindness] to the believers. ([15] Al-Hijr : 88)

1 Jan Trust Foundation

அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.