Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௫௬

وَيَجْعَلُوْنَ لِمَا لَا يَعْلَمُوْنَ نَصِيْبًا مِّمَّا رَزَقْنٰهُمْۗ تَاللّٰهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ   ( النحل: ٥٦ )

And they assign
وَيَجْعَلُونَ
இன்னும் ஆக்குகின்றனர்
to what not they know -
لِمَا لَا يَعْلَمُونَ
அவர்கள் அறியாதவற்றுக்கு
a portion
نَصِيبًا
ஒரு பாகத்தை
of what
مِّمَّا
இருந்து
We have provided them
رَزَقْنَٰهُمْۗ
கொடுத்தோம்/அவர்களுக்கு
By Allah
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
surely you will be asked
لَتُسْـَٔلُنَّ
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
about what you used (to)
عَمَّا كُنتُمْ
பற்றி/இருந்தீர்கள்
invent
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்

Wa yaj'aloona limaa laa ya'lamoona naseebam mimmaa razaqnnaahum; tallaahi latus'alunaa 'ammaa kuntum taftaroon (an-Naḥl 16:56)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்களுடைய தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதனை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

English Sahih:

And they assign to what they do not know [i.e., false deities] a portion of that which We have provided them. By Allah, you will surely be questioned about what you used to invent. ([16] An-Nahl : 56)

1 Jan Trust Foundation

இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.