வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.
English Sahih:
And your Lord is most knowing of whoever is in the heavens and the earth. And We have made some of the prophets exceed others [in various ways], and to David We gave the book [of Psalms]. ([17] Al-Isra : 55)
1 Jan Trust Foundation
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம், (நபி) தாவூதுக்கு ‘ஜபூரை’க் கொடுத்தோம்.