Skip to main content
bismillah

سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
ٱلَّذِىٓ
எத்தகையவன்
أَسْرَىٰ
அழைத்துச்சென்றான்
بِعَبْدِهِۦ
தன் அடிமையை
لَيْلًا
இரவில்
مِّنَ ٱلْمَسْجِدِ
இருந்து/மஸ்ஜிது
ٱلْحَرَامِ
புனிதமானது
إِلَى ٱلْمَسْجِدِ
வரை/அல் மஸ்ஜிது
ٱلْأَقْصَا
அல் அக்ஸா
ٱلَّذِى
எது
بَٰرَكْنَا
அருள் வளம் புரிந்தோம்
حَوْلَهُۥ
அதைச் சுற்றி
لِنُرِيَهُۥ
நாம் காண்பிப்பதற்காக/அவருக்கு
مِنْ ءَايَٰتِنَآۚ
நம் அத்தாட்சிகளில்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்

Subhaanal lazeee asraa bi'abdihee lailam minal Masjidil Haraami ilal Masjidil Aqsal-lazee baaraknaa haw lahoo linuriyahoo min aayaatinaa;innahoo Huwas Samee'ul-Baseer

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
وَجَعَلْنَٰهُ
இன்னும் ஆக்கினோம்/அதை
هُدًى
நேர்வழி காட்டியாக
لِّبَنِىٓ
சந்ததிகளுக்கு
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
أَلَّا تَتَّخِذُوا۟
நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று
مِن دُونِى
என்னைத் தவிர
وَكِيلًا
பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)

Wa aatainaa Moosal-Kitaaba wa ja'alnaahu hudal-liBaneee Israaa'eel;

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதனை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.

Tafseer

ذُرِّيَّةَ
சந்ததிகளே
مَنْ حَمَلْنَا
எவர்கள்/ஏற்றினோம்
مَعَ نُوحٍۚ
நூஹூடன்
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
كَانَ
இருந்தார்
عَبْدًا
ஓர் அடியாராக
شَكُورًا
அதிகம் நன்றி செலுத்துகிறவர்

Zurriyyata man hamalnaa ma'a Nooh innahoo kaana 'abdan shakooraa

(இஸ்ராயீலின் சந்ததிகளே உங்கள் மூதாதைகளைக் கப்பலில்) நாம் நூஹ்வுடன் சுமந்து (வெள்ளப்பிரளயத்திலிருந்து பாதுகாத்துக்) கொண்டோம். அவர்களின் சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)

Tafseer

وَقَضَيْنَآ
அறிவித்தோம்
إِلَىٰ
க்கு
بَنِىٓ
சந்ததிகள்
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
لَتُفْسِدُنَّ
நிச்சயம் விஷமம் செய்வீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
مَرَّتَيْنِ
இரு முறை
وَلَتَعْلُنَّ
இன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள்
عُلُوًّا
பெருமை
كَبِيرًا
பெரியது

Wa qadainaaa ilaa Baneee Israaa'eela fil Kitaabi latufsidunna fil ardi marratain; wa lata'lunna'uluwwan kabeeraa

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம்.

Tafseer

فَإِذَا جَآءَ
வரும்போது
وَعْدُ
வாக்கு
أُولَىٰهُمَا
அவ்விரண்டில் முதல்
بَعَثْنَا
அனுப்பினோம்
عَلَيْكُمْ
உங்கள் மீது
عِبَادًا
அடியார்களை
لَّنَآ
நமக்குரிய
أُو۟لِى
உடையவர்கள்
بَأْسٍ
பலம்
شَدِيدٍ
கடுமையானது
فَجَاسُوا۟
ஊடுருவிச் சென்றனர்
خِلَٰلَ
நடுவில்
ٱلدِّيَارِۚ
வீடுகளுக்கு
وَكَانَ
இருந்தது
وَعْدًا
ஒரு வாக்காக
مَّفْعُولًا
நிறைவேற்றப்பட்டது

Fa-izaa jaaa'a wa'duoolaahumaa ba'asnaaa 'alykurr 'ibaadai-lanaaa ulee baasin shadeedin fajaasoo khilaalad diyaar; wa kaana wa'dam maf'oolaa

அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக இரக்கமற்ற) பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்கு ஊடுருவிச்சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நம்முடைய முந்திய) வாக்குறுதி நிறைவேறியது.

Tafseer

ثُمَّ
பிறகு
رَدَدْنَا
திருப்பினோம்
لَكُمُ
உங்களுக்குசாதகமாக
ٱلْكَرَّةَ
தாக்குதலை
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
وَأَمْدَدْنَٰكُم
இன்னும் உதவினோம்/உங்களுக்கு
بِأَمْوَٰلٍ
செல்வங்களைக் கொண்டு
وَبَنِينَ
இன்னும் ஆண்பிள்ளைகள்
وَجَعَلْنَٰكُمْ
இன்னும் ஆக்கினோம்/ உங்களை
أَكْثَرَ
அதிகமானவர்களாக
نَفِيرًا
எண்ணிக்கையில்

Summa radadnaa lakumul karrata 'alaihim wa amdad-naakum-bi amwaalinuw wa baneen; wa ja'alnaakum aksara nafeeraa

பின்னர் (உங்கள்) காலச் சக்கரத்தைத் திருப்பி உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து (ஏராளமான) பொருள்களையும் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.

Tafseer

إِنْ أَحْسَنتُمْ
நீங்கள் நன்மை செய்தால்
أَحْسَنتُمْ
நன்மை செய்தீர்கள்
لِأَنفُسِكُمْۖ
உங்கள் ஆன்மாக்களுக்குத்தான்
وَإِنْ أَسَأْتُمْ
நீங்கள் தீமை செய்தால்
فَلَهَاۚ
அதுவும் அவற்றுக்கே
فَإِذَا جَآءَ
வந்த போது
وَعْدُ ٱلْءَاخِرَةِ
முறை/மறு
لِيَسُۥٓـُٔوا۟
அவர்கள் கெடுப்பதற்கு
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
وَلِيَدْخُلُوا۟
இன்னும் அவர்கள் நுழைவதற்கு
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதில்
كَمَا دَخَلُوهُ
அவர்கள் நுழைந்தது போன்று/அதில்
أَوَّلَ
முதல்
مَرَّةٍ
முறை
وَلِيُتَبِّرُوا۟
இன்னும் அவர்கள் அழிப்பதற்காக
مَا عَلَوْا۟
எவற்றை/மிகைத்தனர்
تَتْبِيرًا
அழித்தல்

In ahsantum ahsantum li anfusikum wa in asaatum falahaa; fa izaa jaaa'a wa'dul aakhirati liyasooo'oo wujoo hakum wa liyadkhulul masjida kamaa dakhaloohu awwala marratinw wa liyutabbiroo mass'alaw tatbeera

(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்களுடைய முகங்களை கெடுத்து, (துன்புறுத்தி) முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவைகளையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கக் கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.

Tafseer

عَسَىٰ رَبُّكُمْ
ஆகலாம்/உங்கள் இறைவன்
أَن يَرْحَمَكُمْۚ
கருணை புரிய/உங்களுக்கு
وَإِنْ عُدتُّمْ
நீங்கள் திரும்பினால்
عُدْنَاۘ
நாம் திரும்புவோம்
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
جَهَنَّمَ
நரகத்தை
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
حَصِيرًا
விரிப்பாக

'Asaa rabbukum anyyarhamakum; wa in 'uttum 'udnaa; wa ja'alnaa jahannama lilkaafireena haseera

(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டுப் பின்னும் விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணைப் புரியலாம். (அவ்வாறன்றி உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். அன்றி (இத்தகைய) நிராகரிப்பவரை நரகம் சூழ்ந்து கொள்ளும்படியும் செய்வோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
ٱلْقُرْءَانَ
குர்ஆன்
يَهْدِى
நேர்வழி காட்டுகிறது
لِلَّتِى
எதன் பக்கம்
هِىَ أَقْوَمُ
அது/மிக சரியானது
وَيُبَشِّرُ
இன்னும் நற்செய்தி கூறுகிறது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
ٱلَّذِينَ
எவர்கள்
يَعْمَلُونَ
செய்வார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
أَنَّ
நிச்சயமாக
لَهُمْ
அவர்களுக்கு
أَجْرًا كَبِيرًا
கூலி/பெரியது

Inna haazal Quraana yahdee lillatee hiya aqwamu wa yubashshirul mu'mineenal lazeena ya'maloonas saalihaati anna lahum ajran kabeeraa

நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.

Tafseer

وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
أَعْتَدْنَا
ஏற்படுத்தி இருக்கிறோம்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
வேதனையை
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது

Wa annal lazeena laa yu'minoona bil aakhirati a'tadnaa lahum 'azaaban aleemaa

அன்றி, (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் (என்றும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.)

Tafseer
குர்ஆன் தகவல் :
பனீ இஸ்ராயீல்
القرآن الكريم:الإسراء
ஸஜ்தா (سجدة):109
ஸூரா (latin):Al-Isra'
ஸூரா:17
வசனம்:111
Total Words:533
Total Characters:3460
Number of Rukūʿs:12
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:50
Starting from verse:2029