Skip to main content

وَيَدْعُ
பிரார்த்திக்கிறான்
ٱلْإِنسَٰنُ بِٱلشَّرِّ
மனிதன்/தீமைக்கு
دُعَآءَهُۥ
அவன் பிரார்த்திப்பதைப் (போலவே)
بِٱلْخَيْرِۖ
நன்மைக்கு
وَكَانَ
இன்னும் இருக்கின்றான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
عَجُولًا
அவசரக்காரனாக

Wa yad'ul insaanu bishsharri du'aaa 'ahoo bilkhayr; wa kaanal insaanu 'ajoola

மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.

Tafseer

وَجَعَلْنَا
ஆக்கினோம்
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை
ءَايَتَيْنِۖ
இரு அத்தாட்சிகளாக
فَمَحَوْنَآ
இன்னும் மங்கச்செய்தோம்
ءَايَةَ
அத்தாட்சியை
ٱلَّيْلِ
இரவின்
وَجَعَلْنَآ
இன்னும் ஆக்கினோம்
ءَايَةَ
அத்தாட்சியை
ٱلنَّهَارِ
பகலின்
مُبْصِرَةً
ஒளிரக்கூடியதாக
لِّتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக
فَضْلًا مِّن
அருளை/இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَلِتَعْلَمُوا۟
இன்னும் அறிவதற்காக
عَدَدَ
எண்ணிக்கையை
ٱلسِّنِينَ
ஆண்டுகளின்
وَٱلْحِسَابَۚ
இன்னும் கணக்கை
وَكُلَّ شَىْءٍ
எல்லா விஷயங்களையும்
فَصَّلْنَٰهُ
விவரித்தோம்/ அவற்றை
تَفْصِيلًا
விரிவாக

Wa ja'alnal laila wannahaara Aayatayni famahawnaaa Aayatal laili wa ja'alnaaa Aayatan nahaari mubsiratal litabtaghoo fadlam mir Rabbikum wa lita'lamoo 'adadas sineena walhisaab; wa kulla shai'in fassalnaahu tafseelaa

இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையை(யும் மாதங்களின் கணக்கையும் இதன் மூலம்) நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.

Tafseer

وَكُلَّ إِنسَٰنٍ
இன்னும் எல்லா/மனிதன்
أَلْزَمْنَٰهُ
இணைத்தோம்/அவனுக்கு
طَٰٓئِرَهُۥ
அவனுடையசெயலை
فِى عُنُقِهِۦۖ
அவனுடைய கழுத்தில்
وَنُخْرِجُ
வெளிப்படுத்துவோம்
لَهُۥ يَوْمَ
அவனுக்கு/நாளில்
ٱلْقِيَٰمَةِ
மறுமை
كِتَٰبًا
ஒரு புத்தகம்
يَلْقَىٰهُ
அதை சந்திப்பான்
مَنشُورًا
விரிக்கப்பட்டதாக

Wa kulla insaanin alzamnaahu taaa'irahoo fe 'unuqihee wa nukhriji lahoo Yawmal Qiyaamati kitaabany yalqaahu manshooraa

ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான்.

Tafseer

ٱقْرَأْ
நீ படி!
كِتَٰبَكَ
உன் புத்தகத்தை
كَفَىٰ
போதுமானவன்
بِنَفْسِكَ
நீயே
ٱلْيَوْمَ
இன்று
عَلَيْكَ
உனக்கெதிராக
حَسِيبًا
விசாரிப்பாளன்

Iqra kitaabak kafaa binafsikal Yawma 'alaika haseebaa

(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.)

Tafseer

مَّنِ ٱهْتَدَىٰ
எவர்/நேர்வழிசெல்வார்
فَإِنَّمَا يَهْتَدِى
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காக
وَمَن ضَلَّ
இன்னும் எவர்/வழிகெடுவார்
فَإِنَّمَا يَضِلُّ
அவர் வழிகெடுவதெல்லாம்
عَلَيْهَاۚ
தனக்கெதிராக
وَلَا تَزِرُ
சுமக்காது
وَازِرَةٌ
சுமக்கக்கூடியது
وِزْرَ
(பாவச்) சுமையை
أُخْرَىٰۗ
மற்றொன்றின்
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
مُعَذِّبِينَ
வேதனை செய்பவர்களாக
حَتَّىٰ نَبْعَثَ
நாம் அனுப்பும் வரை
رَسُولًا
ஒரு தூதரை

Manihtadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa; wa laa taziru waaziratunw wizra ukhraa; wa maa kunnaa mu'azzibeena hatta nab'asa Rasoola

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.

Tafseer

وَإِذَآ أَرَدْنَآ
நாம் நாடினால்
أَن نُّهْلِكَ
நாம் அழிக்க
قَرْيَةً
ஓர் ஊரை
أَمَرْنَا
ஏவுவோம்
مُتْرَفِيهَا
அதன் சுகவாசிகளை
فَفَسَقُوا۟
ஆகவேபாவம்புரிவார்கள்
فِيهَا
அதில்
فَحَقَّ
ஆகவே நிகழ்ந்துவிடும்
عَلَيْهَا ٱلْقَوْلُ
அதன் மீது/வாக்கு
فَدَمَّرْنَٰهَا
தரைமட்டமாக்கி விடுவோம்/அதை
تَدْمِيرًا
தரைமட்டமாக்குதல்

Wa izaaa aradnaaa an nuhlika qaryatan amarnaa mutrafeehaa fafasaqoo feehaa fahaqqa 'alaihal qawlu fadammarnaahaa tadmeeraa

யாதொரு ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

Tafseer

وَكَمْ
எத்தனை
أَهْلَكْنَا
அழித்தோம்
مِنَ ٱلْقُرُونِ
தலைமுறைகளை
مِنۢ بَعْدِ
பின்னர்
نُوحٍۗ
நூஹூக்கு
وَكَفَىٰ
இன்னும் போதுமானவன்
بِرَبِّكَ
உம் இறைவனே
بِذُنُوبِ
பாவங்களை
عِبَادِهِۦ
தன் அடியார்களின்
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக
بَصِيرًا
உற்று நோக்குபவனாக

Wa kam ahlaknaa minal qurooni mim ba'di Nooh; wa kafaa bi Rabbika bizunoobi 'ibaadihee Khabeeram Baseeraa

நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழிந்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவை யில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

مَّن
எவர்
كَانَ
இருப்பார்
يُرِيدُ
நாடுகின்றவராக
ٱلْعَاجِلَةَ
இம்மையை
عَجَّلْنَا
முற்படுத்தி கொடுப்போம்
لَهُۥ فِيهَا
அவருக்கு/அதில்
مَا نَشَآءُ
எதை/நாடுவோம்
لِمَن
எவருக்கு
نُّرِيدُ ثُمَّ
நாடுவோம்/பிறகு
جَعَلْنَا
ஆக்குவோம்
لَهُۥ
அவருக்கு
جَهَنَّمَ
நரகத்தை
يَصْلَىٰهَا
எரிந்து பொசுங்குவார்/அதில்
مَذْمُومًا
இகழப்பட்டவராக
مَّدْحُورًا
தூரமாக்கப்பட்டவராக

Man kaana yureedul 'aajilata 'ajjalnaa lahoo feehaa maa nashaaa'u liman nureedu summa ja'alnaa lahoo Jahannama yaslaahaa mazmoomammad hooraa

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.

Tafseer

وَمَنْ
எவர்(கள்)
أَرَادَ
நாடுவார்(கள்)
ٱلْءَاخِرَةَ
மறுமையை
وَسَعَىٰ
இன்னும் முயற்சி செய்வார்(கள்)
لَهَا
அதற்கு
سَعْيَهَا
அதற்குரிய முயற்சி
وَهُوَ
அவர்(கள்)
مُؤْمِنٌ
நம்பிக்கை கொண்டவர்(களாக)
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
كَانَ
இருந்தது
سَعْيُهُم
அவர்களுடைய முயற்சி
مَّشْكُورًا
நன்றி செலுத்தப்பட்டதாக

Wa man araadal Aakhirata wa sa'aa lahaa sa'yahaa wa huwa mu'minun fa ulaaa'ika kaana sa'yuhum mashkooraa

எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும்.

Tafseer

كُلًّا
எல்லோருக்கும்
نُّمِدُّ
கொடுத்துதவுவோம்
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு
وَهَٰٓؤُلَآءِ
இன்னும் இவர்களுக்கு
مِنْ
இருந்து
عَطَآءِ
கொடை
رَبِّكَۚ
உம் இறைவனின்
وَمَا كَانَ
இருக்கவில்லை
عَطَآءُ
கொடை
رَبِّكَ
உம் இறைவனின்
مَحْظُورًا
தடுக்கப்பட்டதாக

Kullan numiddu haaa 'ulaaa'i wa haaa'ulaaa'i min 'ataaa'i rabbik; wa maa kaana 'ataaa'u rabbika mahzooraa

(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உங்கள் இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உங்கள் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படுவதில்லை.

Tafseer