(பின்னும் இறைவனை நோக்கி) "என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?" (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) "நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்" என்று கூறினான்.
English Sahih:
[Iblees] said, "Do You see this one whom You have honored above me? If You delay me [i.e., my death] until the Day of Resurrection, I will surely destroy his descendants, except for a few." ([17] Al-Isra : 62)
1 Jan Trust Foundation
“எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என்னை விட நீ கண்ணியப்படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக?” (என்று ஏளனமாக கூறி) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். (ஆனால் நீ அருள்புரியும்) குறைவானவர்களைத் தவிர”என்று (இப்லீஸ்) கூறினான்.