Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௮

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْۚ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَلَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰىهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا  ( الكهف: ٢٨ )

And be patient
وَٱصْبِرْ
தடுப்பீராக
yourself
نَفْسَكَ
உம்மை
with
مَعَ
உடன்
those who
ٱلَّذِينَ
எவர்கள்
call
يَدْعُونَ
பிரார்த்திக்கிறார்கள்
their Lord
رَبَّهُم
தங்கள் இறைவனை
in the morning
بِٱلْغَدَوٰةِ
காலையில்
and the evening
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
desiring
يُرِيدُونَ
நாடியவர்களாக
His Face
وَجْهَهُۥۖ
அவனுடைய முகத்தை
And (let) not pass beyond
وَلَا تَعْدُ
அகன்றிடவேண்டாம்
your eyes
عَيْنَاكَ
உம் இரு கண்கள்
over them
عَنْهُمْ
அவர்களை விட்டு
desiring
تُرِيدُ
நாடுகிறீர்
adornment
زِينَةَ
அலங்காரத்தை
(of) the life
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
(of) the world
ٱلدُّنْيَاۖ
உலகம்
and (do) not obey
وَلَا تُطِعْ
கீழ்ப்படியாதீர்
whom
مَنْ
எவனுக்கு
We Have Made Heedless
أَغْفَلْنَا
கவனமற்றதாக ஆக்கினோம்
his heart
قَلْبَهُۥ
அவனுடைய உள்ளத்தை
of Our rememberance
عَن ذِكْرِنَا
நம் நினைவை விட்டு
and follows
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினான்
his desires
هَوَىٰهُ
தனது மன இச்சையை
and is
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டது
his affair
أَمْرُهُۥ
அவனுடைய காரியம்
(in) excess
فُرُطًا
எல்லை மீறியதாக

Wasbir nafsaka ma'al lazeena yad'oona Rabbahum bilghadaati wal'ashiyyi yureedoona Wajhahoo wa laa ta'du 'aynaaka 'anhum tureedu zeenatal hayaatid dunyaa wa laa tuti' man aghfalnaa qalbahoo 'an zikrinaa wattaba'a hawaahu wa kaana amruhoo furutaa (al-Kahf 18:28)

Abdul Hameed Baqavi:

(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக் கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது.

English Sahih:

And keep yourself patient [by being] with those who call upon their Lord in the morning and the evening, seeking His face [i.e., acceptance]. And let not your eyes pass beyond them, desiring adornments of the worldly life, and do not obey one whose heart We have made heedless of Our remembrance and who follows his desire and whose affair is ever [in] neglect. ([18] Al-Kahf : 28)

1 Jan Trust Foundation

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.