Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௬

وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوْٓا اٰيٰتِيْ وَمَآ اُنْذِرُوْا هُزُوًا  ( الكهف: ٥٦ )

And not We send
وَمَا نُرْسِلُ
அனுப்ப மாட்டோம்
the Messengers
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
except (as) bearers of glad tidings
إِلَّا مُبَشِّرِينَ
தவிர/நற்செய்தி கூறுபவர்களாக
and (as) warners
وَمُنذِرِينَۚ
இன்னும் எச்சரிப்பவர்களாக
And dispute
وَيُجَٰدِلُ
இன்னும் வாதிடுகிறார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieve
كَفَرُوا۟
நிராகரித்தனர்
with falsehood
بِٱلْبَٰطِلِ
அசத்தியத்தைக் கொண்டு
to refute
لِيُدْحِضُوا۟
அவர்கள் அழிப்பதற்காக
thereby
بِهِ
அதைக் கொண்டு
the truth
ٱلْحَقَّۖ
சத்தியத்தை
And they take
وَٱتَّخَذُوٓا۟
இன்னும் எடுத்துக்கொண்டனர்
My Verses
ءَايَٰتِى
என் வசனங்களை
and what they are warned
وَمَآ أُنذِرُوا۟
இன்னும் எச்சரிக்கப்பட்டவற்றை
(in) ridicule
هُزُوًا
கேலியாக

Wa maa nursilul mursaleena illaa mubashshireena wa munzireen; wa yujaadilul lazeena kafaroo bilbaatili liyudhidoo bihil haqqa wattakhazooo Aayaatee wa maaa unziroo huzuwaa (al-Kahf 18:56)

Abdul Hameed Baqavi:

நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம்முடைய தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம்முடைய வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

English Sahih:

And We send not the messengers except as bringers of good tidings and warners. And those who disbelieve dispute by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth and have taken My verses, and that of which they are warned, in ridicule. ([18] Al-Kahf : 56)

1 Jan Trust Foundation

இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.