وَرَبُّكَ الْغَفُوْرُ ذُو الرَّحْمَةِۗ لَوْ يُؤَاخِذُهُمْ بِمَا كَسَبُوْا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَۗ بَلْ لَّهُمْ مَّوْعِدٌ لَّنْ يَّجِدُوْا مِنْ دُوْنِهٖ مَوْىِٕلًا ( الكهف: ٥٨ )
Wa Rabbukal Ghafooru zur rahmati law yu'aakhi zuhum bimaa kasaboo la'ajala lahumul 'azaab; bal lahum maw'idul lany yajidoo min doonihee maw'ilaa (al-Kahf 18:58)
Abdul Hameed Baqavi:
ஆனால், (நபியே!) உங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இது வரையில் அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர் களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.
English Sahih:
And your Lord is the Forgiving, the possessor of mercy. If He were to impose blame upon them for what they earned, He would have hastened for them the punishment. Rather, for them is an appointment from which they will never find an escape. ([18] Al-Kahf : 58)
1 Jan Trust Foundation
(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.