அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் யாதொரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக்கூடிய ஞானம் இல்லாத காட்டு மிராண்டிகளாக இருந்தனர்.)
English Sahih:
Until, when he came to the rising of the sun [i.e., the east], he found it rising on a people for whom We had not made against it any shield. ([18] Al-Kahf : 90)
1 Jan Trust Foundation
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்குத் திசையை) அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது உதிப்பதாக அதைக் கண்டார். அதற்கு முன்னாலிருந்து (அதன் வெப்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றும் நிழல் தரும் மலை, மரம், வீடு போன்ற) ஒரு தடுப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை.