அதற்கவர் "அவ்வாறே (நடைபெறும் என்று) உங்கள் இறைவன் கூறுகின்றான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம் (என்றும்) இது முடிவாக உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம்" என்றும் கூறுகின்றான்.
English Sahih:
He said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, and We will make him a sign to the people and a mercy from Us. And it is a matter [already] decreed.'" ([19] Maryam : 21)
1 Jan Trust Foundation
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (ஜிப்ரயீல்) கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான்: “அது தனக்கு எளிதாகும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவும் (இவ்வாறு நடைபெறும்). இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”