Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௧௩

وَقَالَتِ الْيَهُوْدُ لَيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَيْءٍۖ وَّقَالَتِ النَّصٰرٰى لَيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَيْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَۗ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ   ( البقرة: ١١٣ )

And said
وَقَالَتِ
இன்னும் கூறினா(ர்க)ள்
the Jews
ٱلْيَهُودُ
யூதர்கள்
"Not
لَيْسَتِ
இல்லை
the Christians
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
(are) on anything"
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
and said
وَقَالَتِ
கூறினா(ர்க)ள்
the Christians
ٱلنَّصَٰرَىٰ
கிறித்துவர்கள்
"Not
لَيْسَتِ
இல்லை
the Jews
ٱلْيَهُودُ
யூதர்கள்
(are) on anything"
عَلَىٰ شَىْءٍ
எதிலும்
although they
وَهُمْ
அவர்களுமோ
recite
يَتْلُونَ
ஓதுகிறார்கள்
the Book
ٱلْكِتَٰبَۗ
வேதத்தை
Like that
كَذَٰلِكَ
இப்படியே
said
قَالَ
கூறினார்(கள்)
those who (do) not know
ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
எவர்கள்/அறிய மாட்டார்கள்
similar
مِثْلَ
போன்றே
their saying
قَوْلِهِمْۚ
இவர்களுடைய கூற்று
[So] Allah
فَٱللَّهُ
ஆகவே அல்லாஹ்
will judge
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
between them
بَيْنَهُمْ
இவர்களுக்கு மத்தியில்
(on the) Day
يَوْمَ
நாளன்று
(of) Resurrection
ٱلْقِيَٰمَةِ
மறுமை
in what
فِيمَا
எதில்
they were
كَانُوا۟
இருந்தார்கள்
[in it]
فِيهِ
அதில்
differing
يَخْتَلِفُونَ
தர்க்கிக்கிறார்கள்

Wa qaalatil Yahoodu laisatin Nasaaraa 'alaa shai'inw-wa qaalatin Nasaaraaa laisatil Yahoodu 'alaa shai'inw'wa hum yatloonal Kitaab; kazaalika qaalal lazeena la ya'lamoona misla qawlihim Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon (al-Baq̈arah 2:113)

Abdul Hameed Baqavi:

தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.

English Sahih:

The Jews say, "The Christians have nothing [true] to stand on," and the Christians say, "The Jews have nothing to stand on," although they [both] recite the Scripture. Thus do those who know not [i.e., the polytheists] speak the same as their words. But Allah will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ. ([2] Al-Baqarah : 113)

1 Jan Trust Foundation

யூதர்கள் கூறுகிறார்கள்| “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்| “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.