அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.
English Sahih:
Fight them until there is no [more] fitnah and [until] religion [i.e., worship] is [acknowledged to be] for Allah. But if they cease, then there is to be no aggression [i.e., assault] except against the oppressors. ([2] Al-Baqarah : 193)
1 Jan Trust Foundation
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இணைவைத்தல் நீங்கி, வழிபாடு அல்லாஹ்விற்கு ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறல் இல்லை.