Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௭

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ۗ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰىۖ وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ  ( البقرة: ١٩٧ )

(For) the Hajj
ٱلْحَجُّ
ஹஜ்ஜு
(are) months
أَشْهُرٌ
மாதங்கள்
well known
مَّعْلُومَٰتٌۚ
அறியப்பட்டவை
then whoever
فَمَن
ஆகவே எவர்
undertakes
فَرَضَ
கடமையாக்கினார்
therein the Hajj
فِيهِنَّ ٱلْحَجَّ
அவற்றில் ஹஜ்ஜை
then no sexual relations
فَلَا رَفَثَ
அறவே இல்லை/தாம்பத்திய உறவு
and no wickedness
وَلَا فُسُوقَ
இன்னும் அறவே இல்லை/தீச்சொல் பேசுதல்
and no quarrelling
وَلَا جِدَالَ
இன்னும் அறவே இல்லை/தர்க்கம்
during the Hajj
فِى ٱلْحَجِّۗ
ஹஜ்ஜில்
And whatever you do
وَمَا تَفْعَلُوا۟
நீங்கள் எதைச் செய்தாலும்
of good
مِنْ خَيْرٍ
நன்மையில்
knows it
يَعْلَمْهُ
அதை அறிவான்
Allah
ٱللَّهُۗ
அல்லாஹ்
And take provision
وَتَزَوَّدُوا۟
இன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
(but) indeed
فَإِنَّ
ஆகவே நிச்சயமாக
(the) best
خَيْرَ
சிறந்தது
provision
ٱلزَّادِ
கட்டுச்சாதத்தில்
(is) righteousness
ٱلتَّقْوَىٰۚ
அல்லாஹ்வை அஞ்சுவதுதான்
And fear Me
وَٱتَّقُونِ
இன்னும் என்னை அஞ்சுங்கள்
O men (of) understanding!
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே

Al-Hajju ashhurum ma'-loomaat; faman farada feeinnal hajja falaa rafasa wa laa fusooqa wa laa jidaala fil Hajj; wa maa taf'aloo min khairiny ya'lamhul laah; wa tazawwadoo fa inna khairaz zaadit taqwaa; wattaqooni yaaa ulil albaab (al-Baq̈arah 2:197)

Abdul Hameed Baqavi:

ஹஜ்ஜு (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை களில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத்தான். ஆதலால் அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.

English Sahih:

Hajj is [during] well-known months, so whoever has made Hajj obligatory upon himself therein [by entering the state of ihram], there is [to be for him] no sexual relations and no disobedience and no disputing during Hajj. And whatever good you do – Allah knows it. And take provisions, but indeed, the best provision is fear of Allah. And fear Me, O you of understanding. ([2] Al-Baqarah : 197)

1 Jan Trust Foundation

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.