وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَاۤءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ۖ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ( البقرة: ٨٤ )
Wa iz akhaznaa meesaa qakum laa tasfikoona dimaaa'akum wa laa tukrijoona anfusakum min diyaarikum summa aqrartum wa antum tashhadoon (al-Baq̈arah 2:84)
Abdul Hameed Baqavi:
அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
English Sahih:
And [recall] when We took your covenant, [saying], "Do not shed your [i.e., each other's] blood or evict one another from your homes." Then you acknowledged [this] while you were witnessing. ([2] Al-Baqarah : 84)
1 Jan Trust Foundation
இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.