Skip to main content

ஸூரத்து தாஹா வசனம் ௧௨௧

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۚ وَعَصٰٓى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى ۖ  ( طه: ١٢١ )

Then they both ate
فَأَكَلَا
ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்
from it
مِنْهَا
அதிலிருந்து
so became apparent
فَبَدَتْ
ஆகவே தெரியவந்தன
to them
لَهُمَا
அவ்விருவருக்கும்
their shame
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் மறைவிடங்கள்
and they began
وَطَفِقَا
இன்னும் முற்பட்டனர்
(to) fasten
يَخْصِفَانِ
அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு
on themselves
عَلَيْهِمَا
தங்கள் இருவர் மீது
from (the) leaves
مِن وَرَقِ
இலைகளை
(of) Paradise
ٱلْجَنَّةِۚ
சொர்க்கத்தின்
And Adam disobeyed
وَعَصَىٰٓ
இன்னும் மாறுசெய்தார்
And Adam disobeyed
ءَادَمُ
ஆதம்
his Lord
رَبَّهُۥ
தன் இறைவனுக்கு
and erred
فَغَوَىٰ
ஆகவே வழி தவறி விட்டார்

Fa akalaa minhaa fabadat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannah; wa 'asaaa Aadamu Rabbahoo faghawaa (Ṭāʾ Hāʾ 20:121)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறு செய்து வழி தவறிவிட்டார்.

English Sahih:

And they [i.e., Adam and his wife] ate of it, and their private parts became apparent to them, and they began to fasten over themselves from the leaves of Paradise. And Adam disobeyed his Lord and erred. ([20] Taha : 121)

1 Jan Trust Foundation

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.