بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌۗ وَلَكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ ( الأنبياء: ١٨ )
Bal naqzifu bilhaqqi 'alal baatili fa yadmaghuhoo fa izaa huwa zaahiq; wa lakumul wailu mimmaa tasifoon (al-ʾAnbiyāʾ 21:18)
Abdul Hameed Baqavi:
அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகின்றோம். அது (அதன் தலையை) உடைத்து விடுகின்றது. பின்னர் அது அழிந்தும் விடுகின்றது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
English Sahih:
Rather, We dash the truth upon falsehood, and it destroys it, and thereupon it departs. And for you is destruction from that which you describe. ([21] Al-Anbya : 18)
1 Jan Trust Foundation
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.